குயில் (Koel)

A sheltered cuckoo lives content within the familiar walls of a palace, unaware of the world beyond its cage. But one voice changes everything—awakening a longing to see, feel, and experience a world it never knew existed.

C. Abhisekh Mohan

குயில் (Koel)
அன்றைய வரையில் கண்கள் கட்டி அடைத்த ஒரு குயில், ராணியின் அந்தப்புரத்தில் உலாவிக் கொண்டிருப்பது போல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். இந்த குயில் அந்தப்புரத்தின் மரங்களைத் தவிர எதையும் உணர்ந்ததும் இல்லை. அந்தப்புரத்திற்கு வெளியே எதையும் கண்டதும் இல்லை. இருப்பினும், ராணியாரின், மற்றும் அந்தப்புரத்தின் மங்கையரின் பிரியத்தை, ஏன், அன்பையும் கூட அனுபவித்தது குயில். அதன் குயில்பாட்டின் மெல்லிசைக்கு ஈடிணையாக அரசவையின் வித்துவான்களே தடுமாறினர். ஆனால், இந்த குயில், தன் வாழ்நாளில் வேறு எதற்குமே வேண்டினதில்லை. ஏங்கியதில்லை. அந்தப்புரத்தின் நீர் தொட்டியில் உச்சி கோடையிலும் குளிர்ந்த நீர் கிடைக்கும். தினம்தோறும், அந்தபுரத்தின் காற்றிற்கு இனிமை ஊட்டியே தன் காலத்தை நகர்த்தியது. தம் வாழ்க்கையின் எளிமையில் உள்ள அழகால், தன்னை அறியாமல், அக்குயில் பெருமை கொண்டது. இந்த பெருமையினாலோ, தனது பேராண்மையினாலோ, தன் கண்கட்டை என்றுமே திறக்க எண்ணியதில்லை அக்குயில். என்றைக்கு நீ அந்தப்புரத்திற்கு பறந்து வந்தாயோ, என்றைக்கு உன் பாட்டை கேட்டேனோ, அன்றைக்கு என் கண்கட்டை அவிழ்த்தேன், உன்னை காண்பதற்கு. அன்றைக்கு, உன்னை காண ஏங்கினேன். அன்புடன், உன் ரசிகன்